இந்திய இளைஞர் ரோமாஞ்ச் மகாஜன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில் குதிரை வண்டி சவாரிகளுக்குத் தடை விதிக்க நகர மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடை 2028 ஜூன் முதல் அமலுக்கு வரவுள்ளது.
நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த குதிரை வண்டிச் சவாரிக்கு இதன் மூலம் முடிவு ஏற்படுகிறது.
கடந்த ஜூன் 17-ம் தேதி, குதிரை கட்டுப்பாட்டை இழந்து ஓடியபோது வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட 18 வயது இந்திய இளைஞர் ரோமாஞ்ச் மகாஜன் உயிரிழந்தார். இதையடுத்து, குதிரை வண்டிச் சவாரிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குதிரை வண்டிச் சவாரி நியூயார்க்கின் பாரம்பரிய அடையாளம் என்றும், வரலாற்றின் ஒரு பகுதி மறைந்துவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்படும் வண்டி ஓட்டுநர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கவும், உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.